தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண் அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பதிவுதாரர்கள் மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பின்படி பரிந்துரை செய்யப்படுவதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 29.5.2017 ஆம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ்-2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு வேளாண் பட்டயம் அல்லது தோட்டக்கலை பட்டயப் படிப்பை கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அல்லது திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதிதிராவிட அருந்ததியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. முற்பட்ட வகுப்பினர் எனில் 30.04.2017 ஆம் தேதி அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாநில அளவிலான உச்தேச பதிவு மூப்பு: முன்னுரிமையுள்ளவர் பிரிவு: 19.5.2017 ஆம் தேதி வரை, பதிவு செய்துள்ள அனைத்து வகுப்பைச் சார்ந்த பதிவுதாரர்களும் உத்தேச பதிவு மூப்புள்ளவர்களாகக் கருதப்படுவர்.
முன்னுரிமையற்றவர்கள் பிரிவு: 15.9.2010 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள பழங்குடியினரின (பொது) பதிவுதாரர்கள், 29.10.2014 தேதி வரை பதிவு செய்துள்ள ஆதிதிராவிட அருந்ததியின (பெண்) பதிவுதாரர்கள், இதேபிரிவில் 14.12.2009 தேதி வரை பொது பதிவுதாரர்கள், 13.5.2015 தேதி வரை பின்தங்கிய முஸ்லிம் பதிவுதாரர்கள், 10.7.2013 தேதி வரை ஆதி திராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் தவிர), முற்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் பதிவுதாரர்கள், இதேபிரிவுகளில் 6.7.2006 தேதி வரை பதிவு செய்துள்ள பொது பதிவுதாரார்கள் மாநில உத்தேச பதிவுமூப்புக்கு கருதப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.