நெடுவாசலில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் டெங்கு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் டெங்கு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 நெடுவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய  பேரணியை, நெடுவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரவணன் தொடங்கி வைத்தார். பேரணியில் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று டெங்கு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், கடைவீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்து அடைந்தனர்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஏசுதாஸ், ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தரராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com