மாநில அளவிலான ஜூடோ போட்டி: பொன்னமராவதி பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் சிறப்பிடம் பெற்றுள்ளான்.
Updated on
1 min read

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் சிறப்பிடம் பெற்றுள்ளான்.
பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விழா ஜூடோ போட்டிகள் நவம்பர் 11 முதல் 13 வரை விழுப்புரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் தி.பாலசுப்ரமணி பங்கேற்று 71கிலோ ஜூடோ பிரிவில் மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளான்.
பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாணவனுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் தலைமை வகித்து மாணவன் தி.பாலசுப்ரமணிக்கு பதக்கத்தையும், சான்றிதழையும் வழங்கிப் பாராட்டினார்.
மேலும் இதே போட்டியில் பங்கேற்ற மாணவன் ஜாகீர் உசேன், இவர்களுக்கு சிறப்பாக பயிற்றுவித்த கராத்தே ஆசிரியர் வீரையா, உடற்கல்வி ஆசிரியர் கதிரேசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com