தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொன்னமராவதியில்  பாரம்பரிய விளையாட்டுப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பாரம்பரிய விளையாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:58 am

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பாரம்பரிய விளையாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
பல்லாங்குழி, தாயம், நொண்டியடித்தல், சொட்டாங்கல், நாடுபிடித்தல், பானை உடைத்தல், பச்சைக்குதிரை, கபடி, கயிறு இழுத்தல், பம்பரம் சுற்றுதல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை இப்பள்ளி மாணவர்கள் விளையாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் வே. முருகேசன், தனி அலுவலர் நெ.ராமச்சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல் திருக்களம்பூர் ஊராட்சி அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் வெ.கவிதா, ஆசிரியர் ராஜூ உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.