அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பொன்னமராவதி வட்டாரத்திற்குட்பட்ட 122 பள்ளிகளில் தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி திட்டத்தின் கீழ் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது கனவு தூய்மையான இந்தியா எனும் தலைப்பிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தூய்மை இந்தியாவை உருவாக்குவதில் எனது பங்களிப்பு எனும் தலைப்பிலும் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வட்டார அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் மூன்று, ஐந்து, எட்டு ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு நடைபெற்றது. செம்பூதி, பொன்.புதுப்பட்டி பள்ளிகளில் நடைபெற்ற அடைவுத்தேர்வினை அனைவருக்கும் கல்வித்திட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசன்ஆய்வு செய்தார். உடன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேன்மொழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.