புதுகை நகராட்சிப்பகுதியில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக புகார் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து திமுக நகர செயலாளர் க. நைனாமுகமது புதுக்கோட்டை நகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் : புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து செயல்படுத்தி வருகின்ற புதை சாக்கடை திட்டம் தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் 42 வது வார்டு மறைமலை நகரில் சுமார் 15 அடி ஆழம் 10 அடி அகலம் கொண்ட பள்ளம் தோண்டப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
இந்த பள்ளம் பெரிய ஆபத்தை விளைவிக்கூடிய வகையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் நடமாடும் சூழ்நிலையில் உள்ளனர். மேலும் மறைமலை நகர் பகுதியில் தார்சாலை கடந்த 8 ஆண்டுகளாகப் போடப்படவில்லை. அதேபோல் சாக்கடை வசதியும் இல்லை. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவம் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.