Enable Javscript for better performance
அடைக்கலம்காத்தார் கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம்காத்தார் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
    விழாவையொட்டி புதன்கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி,கலச ஸ்தாபனம், முதற்கால யாகபூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 6 மணியளவில் லட்சுமி பூஜை, கோ பூஜை மற்றும் 4-ம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து 9.45-க்கு புனிதநீரை கும்பத்தில் ஊற்றி அடைக்கலம் காத்தார், கருப்பர், தொட்டிச்சிஅம்மன், கொங்காணி சித்தன், சன்னாச்சி, பட்டாணி ஆகிய தெய்வங்களுக்கு சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவனூர் சுவாமிநாத பண்டிதர் சர்வசாதகம் செய்தார். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆதி. கருப்பையா பரம்பரை பூசாரி, அடைக்கலம் காத்தார் கோயில் பங்காளிகள், மற்றும் மேலத்தானியம் கிராமத்தினர் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai