அன்னவாசல் அருகே அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
அன்னவாசலில் உள்ள மேட்டுத்தெரு பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மேட்டுத்தெரு பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனை (50) கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.