அறந்தாங்கியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம் வட்டக் கிளைத் தலைவர் துரைசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் துணைத் தலைவர் மன்றம் நா. சுப்பையா, வட்டார பொருளாளர் மு. ராஜகோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் அக். 25 அன்று கிளையின் ஆண்டு விழாவை நடத்துவது, இதனையொட்டி உறுப்பினர் சேர்க்கை, மூத்தோர் குரல் இதழ் சந்தா சேர்ப்பு மாநிலக் கட்டட நிதி திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் இணைச் செயலர் க. இளஞ்செழியன், ச. செல்வராஜன், சு. அருணாசலம், நாராயணன், ராஜூ உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். வட்டாரச் செயலர் கோ. பாலகிருஷ்ணன் வரவேற்றார்.