அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரம் நைனாமுகமது கல்வியியல் கல்லூரியில் புதிய வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு நைனாமுகமது கல்வி நிறுவனங்களின் தலைவர் நை.முகமது பாரூக் தலைமை வகித்தார். நைனாமுகமது கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்.மனோகரன், நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராபர்ட் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் பேராசிரியர் ஏ.பி.குருமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது: ஆசிரியர்கள் தலைமைப் பண்பு, மாணவர்களிடம் கொண்டுள்ள அணுகுமுறை, ஆளுமை ப்பண்புகள், தனித்திறன் மேம்பாடு மற்றும் மொழித்திறன், உளவியல் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு செயல்பட்டாலே சிறந்த ஆசிரியர்களாகத் திகழ முடியும். தேசத்தின் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள் என்பதை உணரவேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன், மாணவர்களிடம் அன்புகாட்டி அவர்களை வழிநடத்தினாலே நல்ல ஆசிரியர்களாக திகழ முடியும் என்றார்.
முன்னதாக பேராசிரியர் இராமநாதன் வரவேற்றார் நிறைவில் கல்லூரி மேலாளர் மாரிச்சாமி நன்றி கூறினார்.