கந்தர்வகோட்டை பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்றதாக இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு கந்தர்வகோட்டை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை கந்தர்வகோட்டை அருகே உள்ள மட்டாங்கால், நெப்புகை பகுதிகளில் ரோந்துப் பணியில் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நெப்புகை கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன்(31) உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 120 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.