மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு

பொன்னமராவதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த சென்ட்ரிங் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

பொன்னமராவதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த சென்ட்ரிங் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார்நகரைச் சேர்ந்தவர்  பெ. நாகராஜன் (40). கட்டட சென்ட்ரிங் தொழிலாளி. இவர், செவ்வாய்க்கிழமை பொன்னமராவதி - கொப்பனாபட்டி சாலையில் செம்பொட்டல் அருகே ஒரு வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது சென்ட்ரிங் பணிக்காக கம்பியை எடுத்தபோது எதிர்பாராத விதமாக அது மேலே சென்ற உயர்அழுத்த மின்கம்பியில் உரசியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே நாகராஜன் உயிரிழந்தார். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாகராஜ் உடலைக் கைப்பற்றி வலையபட்டி பாப்பாயி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த நாகராஜனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.