பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் குண்டு எறிதல் போட்டியில் அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவன் பி. ஹரி முதலிடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த வி. பாரதிசிவா, எஸ். மனோஜ், டி. சூர்யா பிரகாஷ், கே. வசந்தகுமார் ஆகியோர் தொடர் ஒட்டத்தில் சிறப்பிடத்தையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.