புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் வெங்களபிடாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
இக்கோயில் திருவிழா ஜூலை 31-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கோயிலில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாய்க்கிழமை ராஜகோபாலபுரம் 4-ம் வீதியில் உள்ள சுந்தரவிநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான மக்கள் பால்குடம், காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.