ரெத்தினகோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம்

அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்டக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர்


அறந்தாங்கி அருகே ரெத்தினகோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்டக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அன்வர் அலி, மாவட்டப் பொருளாளர் பதுர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் பீர்முகமது, ரபீக் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநில செயலாளர் அப்துல் கரீம் பேசியது: வரும் 27 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் திருக்குர்ஆன் மாநாடு குறித்து விளக்கமளித்தார். மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு 4 ஆண்டுகளாக அனைத்து வாக்குறுதிகளிலும் தோல்வியடைந்துவிட்டது.
அதை மறைக்கத்தான் தற்போது ராமர் கோவில் கட்டுவோம் என்ற பிரச்னையை எழுப்பியுள்ளார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 7 சதவீதம் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாணவர் அணி செயலாளர் நிஜாம், மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், தொண்டரணி செயலாளர் பைசல், ரெத்தினகோட்டை யாசின், அறந்தை தாரீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com