Enable Javscript for better performance
'அம்மா' இருசக்கர வாகனத் திட்டம்: கந்தர்வகோட்டையில் 187 பேர் விண்ணப்பம்- Dinamani

சுடச்சுட

    

    'அம்மா' இருசக்கர வாகனத் திட்டம்: கந்தர்வகோட்டையில் 187 பேர் விண்ணப்பம்

    By DIN  |   Published on : 09th February 2018 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 187 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 36 ஊராட்சிகள் உள்ளன. இவைகளுக்கு 120 இருசக்கர வாகனம் என்றும், ஊராட்சி மக்கள் தொகைக்கு ஏற்றவாறும், பெண்களின் விகித அதிகரிப்புக்கு ஏற்றவாறும் இருசக்கர வாகனத்திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி, கடந்த 22-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை 181 விண்ணப்பங்களும், நீட்டிக்கப்பட்ட மூன்று நாள்களில் 6 விண்ணப்பங்களும் என மொத்தம் 187 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சனிக்கிழமை (பிப்.10) கடைசி நாளாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai