Enable Javscript for better performance
உணவு வணிகர்களுக்கு பதிவு உரிமம் வழங்கும் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு வணிகர்களுக்கான பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தலைமை வகித்து உணவு வணிகர்களுக்கான உரிமங்களை வழங்கிப் பேசினார். இதில், பிப்ரவரி மாத இறுதிக்குள் அனைத்து உணவு வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும், தடைசெய்யப்பட்ட உணவு பொருள்களான குட்கா, பான்பராக், பான்மசாலா போன்ற பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தினார்.
    கந்தர்வகோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த உணவு வணிகர்கள் 202 பேர் பதிவு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். வர்த்தகர் சங்கத் தலைவர் மாரிமுத்து, முன்னாள் தலைவர் மைதீன் பாட்சா, சென்ட்ரல் வங்கி கந்தர்வகோட்டை கிளையின் முதுநிலை மேலாளர் ஏ.தினேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அருண்பிரகாஷ், ரமா, ராமநாதன், ஜேம்ஸ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai