Enable Javscript for better performance
குடுமியான்மலைக்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    அன்னவாசல் ஒன்றியம், உருவம்பட்டி, மரிங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள், குடுமியான்மலை கோயிலுக்கு வியாழக்கிழமை களப்பயணம் சென்று வரலாற்று ஆய்வுகளை கண்டறிந்தனர்.
    உருவம்பட்டி, மரிங்கிப்பட்டி பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
    இதுகுறித்து உருவம்பட்டி ஆசிரியர் கு.முனியசாமி கூறியது: 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு களப்பயணம் என்ற பாடம் வந்துள்ளது. அதில், மாணவர்களது ஊரில் உள்ள வேளாண்மை ஆய்வு மையம் / தொடர் வண்டி நிலையம் முதலிய இடங்களுக்கு களப்பயணம் சென்று, அந்த அனுபவம் குறித்து கட்டுரை வரைய வேண்டும் அல்லது அங்கு படங்கள் செய்திகளை திரட்டி தொகுப்பேடு ஒன்றினை உருவாக்கு என்றிருக்கும்.
    சென்ற ஆண்டு வயலோகத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக பண்ணைக்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம்.
    எனவே, இந்த ஆண்டு மாணவர்கள் கேட்டுக் கொண்டதால் மரிங்கிபட்டி பள்ளி மாணவர்களோடு இணைந்து குடுமியான்மலை கோயிலுக்கு சென்றோம். களப்பயணத்துக்கு முன், மாணவர்கள் பயணிக்க வேண்டிய இலக்கு, கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிடுகின்றனர். பயணம் முடிந்தவுடன் மாணவர்கள் வகுப்பறையில் கலந்துரையாடுகின்றனர். இது மாணவர்களுக்கு வழக்கமான செயல்களில் இருந்து கற்றல் மேம்பட உதவுகிறது என்றார். களப்பயணம் வந்திருந்த மாணவி மு.தர்ஷினி கூறியது:
    குடுமியான்மலை கோயிலுக்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே இங்கு வந்திருந்தாலும், கல்வெட்டுகளை இன்று தான் பார்க்கிறோம். ஆயிரம் கால் மண்டபத்தை பார்க்கும்போது, எப்படி இந்த மண்டபத்தை நம் முன்னோர்கள் கட்டினார்கள் என ஆச்சர்யபட்டோம். குடவரைக்கோயிலில் உள்ள இசைக்கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிகிறது. இசைக் கல்வெட்டுகளை தேனீக்கள் கூடு கட்டி இயற்கையாகவே காப்பற்றி வருகிறது.
    கோயிலின் உள்ளே கல் தூண்கள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டிருந்ததையும், அதில் அழகிய கலைநயமிக்க சிலைகளை காணும் போது சிலாகிக்கிறது என்றார்.இதற்கான ஏற்பாடுகளை மரிங்கிபட்டி ஆசிரியர் கவிமதிசோலச்சி செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai