Enable Javscript for better performance
சோழீஸ்வரர் கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜசோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்.எம்.ராஜா தலைமை வகித்தார். பாலாஜி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகவேள்வி நடத்தினர். இதில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விழாவில் பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி, பொதுச்செயலர் பி.பாஸ்கர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்றனர்.
    அதேபோல் பொன்னமராவதி அழகுநாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சரவணன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகவேள்வியை நடத்தினர். தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் காலபைரவரின் வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai