Enable Javscript for better performance
திருநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கோட்டாட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கோட்டாட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 09th February 2018 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் வரும் 11-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி, இதற்கான ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
    ஜல்லிக்கட்டு திடல் தயார்படுத்துதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், கண்காணிப்பு அதிகாரிகள் மாடம், பத்திரிகையாளர் மாடம் அமைத்தல், காளைகள் ஓய்வுக்கூடம், காளைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடு, காளைகள் மற்றும் வீரர்கள் மருத்துவப் பரிசோதனைக் கூடம், வீரர்களுக்கு முதலுதவி மையம் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர். இப்பணிகளை இலுப்பூர் கோட்டாட்சியர் ஆர். ஜெயபாரதி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். இதில், வட்டாட்சியர் சோனை கருப்பையா, வருவாய் ஆய்வாளர் அன்பரசு, சுகாதாரத்துறை அலுவலர்கள் ஊர் முக்கியஸ்தர் எம். பழனியப்பன் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai