Enable Javscript for better performance
தோப்புக்கொல்லையில் குடிநீர் தட்டுப்பாடு : நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தோப்புக்கொல்லையில் குடிநீர் தட்டுப்பாடு : நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th February 2018 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குடி அருகே உள்ள தோப்புக்கொல்லையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆலங்குடி அருகே உள்ள தோப்புக்கொல்லையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கிளை நிர்வாகி பி.மகேஸ்வரி தலைமை வகித்தார்.
    மாவட்டச் செயலாளர் டி.சலோமி கொடியேற்றினார். இதில், தோப்புக்கொல்லை கிராமத்தில் பழுதடைந்துள்ள சிறுமின்விசைத் தொட்டியை சீரமைத்து, குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும். அப்பகுதியில், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். பாப்பாவாரி, தோப்புக்குளத்தில் அரசு புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தேசிய வேலை உறுதித்திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாள்களாகவும், கூலியை ரூ.400-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
    ரேஷன் கடையில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுசீலா, ஒன்றியச் செயலாளர் எஸ்.பாண்டிச்செல்வி, தலைவர் கே.நாடியம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai