Enable Javscript for better performance
நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்கம்

    By DIN  |   Published on : 09th February 2018 05:24 AM  |   அ+அ அ-   |    |  

    புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி பாரதி மகளிர் கலைக்கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    இம்முகாமில் பங்கேற்றுள்ள மாணவிகள், விஜயரகுநாதபுரம் அருகே உள்ள பாரதி நகரில் 7 நாள்கள் உழவாரப் பணியில் ஈடுபட உள்ளனர். தொடக்க விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகிராமன் பங்கேற்று பேசினார். மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் வி.சி.ராமையா முகாமை தொடங்கி வைத்தார்.
    ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ், கல்லூரியின் செயலர் கே.ஆர்.குணசேகரன், அறங்காவல் உறுப்பினர் கே.ரெங்கசாமி, கல்லூரி முதல்வர் கு.தனம், கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai