Enable Javscript for better performance
புதுகையில் 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 108 அவசர ஊர்தி தொழிலாளர்களுக்கு 2017-ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai