Enable Javscript for better performance
வருவாய்த்துறை ஊழியர்கள் 2-ஆவது நாளாக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர்களுக்கான சிறப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிப். 7, 8 ஆகிய 2 நாள்கள் வருவாய்த்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவித்தனர்.
    இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், வருவாய்த்துறை அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai