Enable Javscript for better performance
வேலைவாய்ப்பு முகாம்: 42 பேருக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார அளவிலான இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற இம்முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
    மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ஜான்லிங்டன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    முகாமில் சென்னை வேவ்ஸ், பிசிஎப்சிடி, புதுக்கோட்டை கோடாக், திருச்சி ஐசிஐசிஐ, கரூர் விஸ்தா உள்ளிட்ட பல்வேறு நிறுவனத்தினர், நேர்முகத்தேர்வு மூலம் தங்களது நிறுவனத்துக்கு பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில் 270 வேலையில்லா ஆண், பெண் பட்டதாரிகள் பங்கேற்றனர்.
    அவர்களில் 42 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. 70 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    இதற்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், பஞ்சநாதன், தங்கராஜ், தொகுப்பு களப்பணியாளர்கள் பிரியா, வெள்ளையம்மாள், உஷா, கவிதா, சித்ரா, புவனேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai