Enable Javscript for better performance
129 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    திருமயம் தொகுதிக்கு உள்பட்ட 129 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
    இவ்விழாவுக்கு மாவட்ட சமூக நலத்திட்ட அலுவலர் பி.ரேணுகா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் முன்னிலை வகித்தார். திருமயம் எம்எல்ஏ எஸ்.ரகுபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித்திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நிதி உதவி திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற மகள் திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் திருமயம் ஒன்றியத்தில் 41 பயனாளிகள், அரிமளம் ஒன்றியத்தில் 44, பொன்னமராவதி ஒன்றியத்தில் 44 என மொத்தம் 129 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் (தலா 1 பவுன்) வழங்கிப் பேசினார். வட்டார சமூக நல அலுவலர் செல்வி, திமுக ஒன்றியச் செயலர் அ.அடைக்கலமணி, நகரச்செயலர் அ.அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai