சுடச்சுட

  

  புதுக்கோட்டை அருகே புதன்கிழமை காலை 3 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
  திருச்செங்கோட்டில் இருந்து செங்கற்கள் ஏற்றிவந்த டாரஸ் லாரியை தருமபுரியைச் சேர்ந்த கிருஷ்ணன்(35) ஓட்டிவந்தார். இதேபோல்,  புதுக்கோட்டை மாவட்டம், புதுவயலில் இருந்து திருச்சிக்கு அரிசி மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் ஜகுபர் சாதிக் (42) ஓட்டிவந்தார். இந்நிலையில், திருச்சி - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே இரு லாரிகளும் புதன்கிழமை நேருக்குநேர் மோதியதில், லாரி ஓட்டுநர்கள் கிருஷ்ணன், ஜகுபர் சாதிக், அரிசி மூட்டை ஏற்றிச்சென்ற லாரியின் கிளீனர் சிவகங்கை மாவட்டம் கரிவியாப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கலையரசன் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். இதையடுத்து, அவ்வழியே சென்ற மற்றொரு டிப்பர் லாரி விபத்துக்குள்ளான லாரிகள் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், டிப்பர் லாரியின் ஓட்டுநர் கீரனூர் பகுதியைச் சேர்ந்த எம்.பால்ராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்த கீரனூர் போலீஸார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீரனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai