Enable Javscript for better performance
இரு வீடுகளில் 69 பவுன் தங்க நகை, ரொக்கம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து 69 பவுன் தங்க நகை, பணம் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது.
    கீரனூர் அருகேயுள்ள ஒத்தக்கடை சீனிவயலைச் சேர்ந்த தம்பதி பாலகிருஷ்ணன், லில்லி. அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களான இருவரும் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு உள்ளே சென்று பார்த்த போது பீராúôவில் இருந்த 39 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    அதேபோல, புதுக்கோட்டை சிப்காட் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கேயன் வெளியூர் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைத்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ரூ. 7ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
    இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai