Enable Javscript for better performance
ஈரோடு மாநாட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட திமுக தொண்டர்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாநாட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட திமுக தொண்டர்

    By DIN  |   Published on : 24th March 2018 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோட்டில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டிற்கு அறந்தாங்கியை சேர்ந்த திமுக தொண்டர் இரு சக்கர வாகனத்தில் கட்சி பிரச்சாரங்களோடு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த மாவட்ட முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் பாலச்சந்தர். இவர் திமுக தொடர்பான கூட்டங்கள் எங்கு நடந்தாலும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் கட்சித் தலைவர் மு.கருணாநிதி, செயல் தலைவர் மு.க ஸ்டாலின் படங்களை கட் அவுட்டாக செய்து வண்டியில் பொருத்தி கட்சியின் பிரச்சார பாடல்களை ஒலித்தபடி பங்கேற்பது வழக்கம். ஈரோட்டில் வருகிற சனி (மார்ச 24), ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 25) நடைபெறவுள்ள கட்சியின் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை புறப்பட்ட பாலச்சந்தரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தி.முத்து உள்ளிட்டோர் வழிஅனுப்பி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai