Enable Javscript for better performance
உயர்ந்த நிலைக்கு வர முயற்சி அவசியம்: சார் ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    முயற்சி செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்றார் சார் ஆட்சியர் கே.எம்.சரயு.
    கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை தெற்குத் தொண்டை மான் ஊரணி அரசு நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியை சுந்தராம்பாள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சார் ஆட்சியர் கே. எம். சரயு பரிசுகள் வழங்கினார்.
    தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சார் ஆட்சியர் கே.எம்.சரயு அளித்த பதில்: அரசுப் பள்ளியில் தாய் மொழியான மலையாளத்தில் படித்தேன். தாய் மொழயில் படித்தால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனது தாய் தான் எனக்கு ரோல் மாடல். சிறு வயதிலிருந்து ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கடினமாக படித்தேன். தினந்தோறும் நாளிதழ்கள் படித்து அதிலிருந்து பொது அறிவைக் கற்றுக் கொண்டேன்.
    பல வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டேன். வாழ்க்கையில் எந்த நிலைக்கு வர வேண்டுமென கனவு காண்பதோடு, அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் க.ஆத்மநாதன் வரவேற்றார். ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai