Enable Javscript for better performance
நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு- Dinamani

சுடச்சுட

    

    நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு

    By DIN  |   Published on : 24th March 2018 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலதேமுத்துபட்டியில் விவசாயிகளை ஏமாற்றி நிலங்களை வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், மேலதேமுத்துபட்டியில் விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை கையப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
    அதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததையடுத்து ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், வாரிசுகளுக்கு தெரியாமல் வயதான விவசாயிகளை ஏமாற்றி பல ஏக்கர் நிலங்களை வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai