Enable Javscript for better performance
மக்கள் தொடர்பு முகாமில் 29 பயனாளிக்கு ரூ.3.39 லட்சம் நலத் திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் தொடர்பு முகாமில் 29 பயனாளிக்கு ரூ.3.39 லட்சம் நலத் திட்ட உதவி

    By DIN  |   Published on : 24th March 2018 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 29 பயனாளிகளுக்கு ரூ.3.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
    பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட அம்மன்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சங்கர காமேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் விஸ்வநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நலம், பொது சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த அரசின் நலத் திட்டங்களை விளக்கிப் பேசினர். இயற்கை மரணம், திருமணம், முதியோர், கல்வி, நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகை என பயனாளிகளுக்கு 29 பேருக்கு ரூ.3.39 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 41 மனுக்கள் பெறப்பட்டது. நடமாடும் மருத்துவ அலுவலர் ரவிக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், திருஞானம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினரால் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தனி வருவாய் ஆய்வாளர் பாண்டி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரமேஷ், பச்சையப்பன், சாகுல்ஹமீது, பாலாஜி, சித்ராதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    முன்னதாக, அம்மன்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அ.ஜெயந்தி வரவேற்றார். காரையூர் வருவாய் ஆய்வாளர் எஸ்.சாதிக் பாட்சா நன்றி கூறினார்.
    ஆலங்குடி... ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு சார் ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்தார். லங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி முன்னிலை வகித்தார். வாரிசு, சிறு, குறு விவசாயிகள் சான்று, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 29 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 15 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டன.
    தனி வட்டாட்சியர் யோகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் ஆரோக்ய சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai