Enable Javscript for better performance
மீட்கப்பட்ட கல்லூரி மாணவர் தந்தையிடம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதி அருகே காணாமல் போன கல்லூரி மாணவரை மீட்ட காவல்துறையினர் தந்தையிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் லோகநாதன்(18). கோயம்புத்தூரில் உறவினர் இல்லத்தில் தங்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்த இவர், கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக்குச் சென்றவரைக் காணவில்லை.
    இதையடுத்து மகனை கண்டுபிடித்து தரக் கோரி அவரது தந்தை சின்னையா, காரையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
    இந்நிலையில் சென்னையில் உணவு விடுதியில் லோகநாதன் வேலை பார்ப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற காரையூர் காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம், லோகநாதனை அழைத்து வந்தார்.
    திருமயம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட லோகநாதன், அவரது தந்தை சின்னையாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai