Enable Javscript for better performance
விராலிமலையில் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    விராலிமலையில் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா

    By DIN  |   Published on : 24th March 2018 04:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விராலிமலை அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    நிகழாண்டுக்கான போட்டி வருகிற மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி, ஜல்லிக்கட்டு திடல் தயார்படுத்துதல், காளை, மாடுபிடி வீரர்கள் பதிவு, பாதுகாப்பு வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
    விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள வாடிவாசலில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் தலைவர் ஆர்.சின்னதம்பி தலைமையில் முகூர்த்தக் கால் நடப்பட்டது.
    மாவட்ட பால்வளத் தலைவர் நடராஜன், ஆத்மா குழுத் தலைவர் எஸ்.பழனியாண்டி, அதிமுக நகரச் செயலாளர் எஸ்.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai