Enable Javscript for better performance
ஆலங்குடி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி கருப்புக் கொடி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குடி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி கருப்புக் கொடி போராட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் இஸ்லாமியர்கள் மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி குடியிருப்புகளில் கருப்புக் கொடி கட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆலங்குடி வட்டம் கல்லாலங்குடி ஊராட்சிக்குள்பட்ட கலிபுல்லா நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கென மயானம் இல்லாததால் சுமார் 4 கி.மீ தொலைவுக்கு சடலங்களை தூக்கிச்சென்று அடக்கம் செய்கின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 2014ஆம் ஆண்டு 70 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இதுவரையில் மயானம் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக,  ஆட்சியர், வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. 
    இந்நிலையில், மயானத்திற்கான நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் போட்டுத்தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குடியிருப்புகளில் கருப்புக் கொடி கட்டியும், கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai