Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்:தமிழ் தேசியக் கட்சியினர் 8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம்: தமிழ் தேசியக் கட்சியினர் 8 பேர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசியக் கட்சியினர் 8 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசம் முடிந்தும், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
     இந்நிலையில், தமிழ் தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலாளர் ரகுபதி தலைமையில் அக்கட்சியினர் 8 பேர்  புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். சம்பவ இடத்துக்குச் சென்ற கணேஷ் நகர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து இறங்கினர். தொடர்ந்து, 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai