Enable Javscript for better performance
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 31st March 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.
    கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ள அய்யாக்கண்ணு தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை விராலிமலைக்கு  வந்தனர். அங்கு மக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    நடைபயணத்தின் போது அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து அதுகுறித்த மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும்.
     மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் முழுமையாக தயாரிக்கப்பட்டு சென்னையில் முதல்வரை சந்தித்து அளிக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, முல்லை பெரியார், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு, நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். 
    ஏரி, குளங்களை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.  காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பதோடு, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai