Enable Javscript for better performance
தேனிமலையில் இன்று ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணி அதிகாரி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தேனிமலையில் இன்று ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணி அதிகாரி ஆய்வு

    By DIN  |   Published on : 31st March 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி அருகே தேனிமலையில் சனிக்கிழமை (மார்ச் 31) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    தேனிமலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டிருக்கும்  வாடிவாசல், பார்வையாளர்கள் தடுப்புகள், மருத்துவ முகாம்  உள்ளிட்டவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொன்னமராவதி வட்டாட்சியர் எஸ்.சங்கர், துணை வட்டாட்சியர்கள் விஸ்வநாதன், வரதராஜன், வருவாய் ஆய்வாளர் சரவணபிரபு, கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai