Enable Javscript for better performance
மேலாண்மை வாரியம் கோரி மறியலில் ஈடுபட்ட இயற்கை விவசாயிகள் 22 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மேலாண்மை வாரியம் கோரி மறியலில் ஈடுபட்ட இயற்கை விவசாயிகள் 22 பேர் கைது

    By DIN  |   Published on : 31st March 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பினர் 22 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகி மூர்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கோட்டை நகர போலீஸார் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 22 பேரைக் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai