Enable Javscript for better performance
வலையபட்டி மலையாண்டி கோயில் அக்கினிக் குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன்- Dinamani

சுடச்சுட

    

    வலையபட்டி மலையாண்டி கோயில் அக்கினிக் குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன்

    By DIN  |   Published on : 31st March 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி வலையபட்டி மலையாண்டி கோயிலில்  பங்குனி உத்திர விழாவையொட்டி திரளான பக்தர்கள் வெள்ளிக்கிழமை அக்கினிக் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
    முருகப்பெருமானின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா இக்கோயிலில் ஆண்டுதோறும்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
    நிகழாண்டு பங்குனி உத்திரவிழாவின் தொடக்கமாக சோழீஸ்வரர் கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக மலையாண்டிகோயில் வந்தனர். தொடர்ந்து, கோயிலின் முன் வளர்க்கப்பட்ட அக்கினிக் குண்டத்தில் பக்தர்கள் பால்குடம், காவடியுடன் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். 
    சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர். விழாவையொட்டி பொன்.வையாபுரிப்பட்டி இளைஞர்கள், ஊரார்கள் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை (மார்ச் 31) மலையாண்டி சுவாமி, சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது.
    அதேபோல, தேனிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற உத்திர  திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொன்னமராவதி பாலமுருகன், வையாபுரி சுப்பிரமணியர், காஞ்சாத்துமலை முருகன், உலகம்பட்டி ஞானியார் மடம் ஆகிய கோயில்களில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai