Enable Javscript for better performance
தம்பி மனைவியை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்தவர் விஷம் அருந்தி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தம்பி மனைவியை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்தவர் விஷம் அருந்தி சாவு

    By DIN  |   Published on : 18th May 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறந்தாங்கி அருகே சொத்துத் தகராறில் தம்பி மனைவியை வெட்டிய வழக்கில் ஜாமீனில் வந்து விஷமருந்தியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    அறந்தாங்கி அருகே வாட்டாத்தூரை சேர்ந்த பாண்டியனுக்கும்(34), அவரது தம்பி சுப்பிரமணியனுக்கிடையே(30) சொத்துத் தகராறு இருந்து வந்தது.  கடந்த மாதம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பாண்டியன் தம்பி சுப்பிரமணியன் மனைவி கார்த்திகாவை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த கார்த்திகா தீவிர சிகிக்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
    வழக்குத் தொடர்பாக, போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பாண்டியனிடம் உறவினர்கள் எவரும் சரிவர பேசுவதில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாண்டியன் கடந்த வாரம் விஷமருந்தினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai