Enable Javscript for better performance
தீவனப் பயிர் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அன்னவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட கோத்திராபட்டியில் தீவனப் பயிர் உற்பத்தி தொழில் நுட்பம் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    வேளாண்மை தொழில்நுட்ப முகமை (அட்மா) 2018-19ஆம் ஆண்டு மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சிக்கு மத்திய அரசுத் திட்ட வேளாண் துணை இயக்குநர் சிங்காரம் தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை (உழவர் பயிற்சி நிலையம்) துணை இயக்குநர் கணேசன், தீவனப் பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள், அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், உழவன் செயலி குறித்து செயல்விளக்கத்துடன் எடுத்துரைத்தார். 
    மலைக்குடிப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் இளவரசு, தீவனப் பயிர்களின் வகைகள், கறவை மாடுகளுக்கான தீவன அட்டவணை, தீவனப் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், அசோலாவை கால்நடை தீவனமாக வளர்த்தல், ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் தீவனப் பயிர் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பழனிச்சாமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ந.உமா மகேஸ்வரி, வட்டார  தொழில் நுட்ப மேலாளர் த.லட்சுமி பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.அன்னவாசல் வட்டாரத்தில் இருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai