Enable Javscript for better performance
பொன்னமராவதியில்  சார்நிலைக் கருவூலக கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பொன்னமராவதியில்  சார்நிலைக் கருவூலக கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th May 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்நிலை கருவூல அலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
    பொன்னமராவதி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாடகை கட்டடத்தில் சார்நிலை கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம்  பொன்னமராவதி வட்டத்திற்குள்பட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பணப் பலன் பெறும் பணிகள், பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு பணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர, பத்திரங்கள், நீதிமன்ற ஸ்டாம்பு விற்பனையும் செய்யப்படுகிறது.
    வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்த அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சார்நிலைக் கருவூல அலுவலகம் சுமார் ரூ.45 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாள்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. 
    பொதுமக்கள் பயனடையும் நோக்கில் கட்டப்பட்ட சார்நிலைக் கருவூல அலுவலக கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai