Enable Javscript for better performance
வாசகர் பேரவை சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு தினமணி மாணவர் மலர் புத்தகம்- Dinamani

சுடச்சுட

    

    வாசகர் பேரவை சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு  தினமணி மாணவர் மலர் புத்தகம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு  வழங்குவதற்காக தினமணி மாணவர் மலர் புத்தகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜாவிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
    புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நூலகங்கள், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தினமணி மாணவர் மலர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக மாவட்டத்தில் உள்ள 
    அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தினமணி மாணவர் மலர் புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜாவிடம், மாவட்டத்தில் உள்ள சுமார் 100 அரசுப் பள்ளிகளுக்கு அளிப்பதற்கான மாணவர் மலரை புதுக்கோட்டை வாசகர் பேரவைத் தலைவர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.   
    மாவட்டக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, வாசகர் பேரவை ஆலோசனைக் குழு உறுப்பினர் மருத்துவர் ராமதாஸ், செயலாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai