அறந்தாங்கியில்  டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

அறந்தாங்கியில் டெங்கு காய்ச்சல்  தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கியில் டெங்கு காய்ச்சல்  தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் நா.மீராஅலி தலைமை வகித்தார். அறந்தாங்கி வட்டாட்சியர் க.கருப்பையா, நாகுடி வட்டார மருத்துவ அலுவலர் முகமது இத்ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம் பேசியது: அறந்தாங்கியில் 27 வார்டுகளில் உள்ள 12,246 வீடுகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் ஒலிபெருக்கி மூலமும், துண்டுபிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். பொதுமக்கள் முழு ஈடுபாடு காட்டி  டெங்கு, பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். 
பள்ளித் தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், வர்த்தக சங்கம், ரோட்டரி, தொண்டு நிறுவன, மகளிர்  சுயஉதவிக் குழுவினர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு அலுவலர் த.முத்துகணேஷ், சுகாதார ஆய்வாளர் சி.சேகர், மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், நகராட்சி அலுலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com