வெட்டுக்காட்டில் அம்மா திட்ட முகாம்

இலுப்பூர் அருகே வெட்டுக்காட்டில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இலுப்பூர் அருகே வெட்டுக்காட்டில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பூர் வருவாய்த் துறை சார்பில் வெட்டுக்காடு கிராமத்துக்குள்பட்ட போலம்பட்டியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டாட்சியர் சோனை கருப்பையா தலைமை வகித்தார். முதியோர் உதவித் தொகை உள்பட அரசு பயன் சார்ந்த பல்வேறு மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, பொது மருத்துவம், கண் சிகிச்சை தொடர்பாக நடத்தப்பட்ட முகாமில்,  அரசு மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனை, சிகிச்சை அளித்தனர். 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாமில் பள்ளி மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கண் மருத்துவர் பரணி, வருவாய் ஆய்வாளர் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com