விராலூர் பெருமாள் கோயிலில் திருவீதி உலா

விராலிமலை அருகேயுள்ள பழமைவாய்ந்த சீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டது. 

விராலிமலை அருகேயுள்ள பழமைவாய்ந்த சீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டது. 
விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து கடைசி சனிக்கிழமை காலை பெருமாள் சன்னதியில் கடம் ஸ்தாபனம், ஹோமங்கள் பூஜைகள் செய்து மூலவர்  மற்றும் உற்சவர்களுக்கு  16 வகை அபிஷேகங்கள் நடந்தன. 
தொடர்ந்து உற்சவரை பக்தர்கள் தோளில் சுமந்து வர திருவீதி உலா மருங்காபுரி முத்துக்குமார் நாதஸ்வர இசையுடன் நடைபெற்றது. விழாவில் ராமானுஜ கைங்கர்ய சபாவினர் பூபாலன், முருகேசன், வெங்கடாசலம், ஏழுமலை, மாரியப்பன், கணேசன் கண்ணதாசன், வழக்குரைஞர் அருண்குமார், சண்முகசுந்தரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமானுஜ கைங்கர்ய சபா மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com