சுடச்சுட

  

  கந்தர்வகோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டி கிராமத்திலுள்ள வீரகாளியம்மன் கோயில் கிடாவெட்டு பூஜை திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.
  இக்கோயில் திருவிழா 10  ஆண்டுகளுக்குப் பிறகு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நாள்தோறும்  மண்டகபடிதாரர்களால் அம்மனுக்கு பல வகை பொருள்களால் ஆன அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்று கரகம் திருவீதியுலா நடைபெற்றது.  
  தொடர்ந்து அம்மன் வீதியுலா வந்து பக்தர்களின் நேர்த்தி கடன் வேண்டுதலாக புதன்கிழமை கிடாவெட்டு பூஜை நடந்தது. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 
  ஏற்பாடுகளை வீரடிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai