அங்கன்வாடி மையத்திற்கு உதவி

பொன்னமராவதி அருகே உள்ள முருக்கபட்டி அங்கன்வாடி மையத்திற்கு சிட்டி அரிமா சங்கம் சார்பில் சமையல் எரிவாயு

பொன்னமராவதி அருகே உள்ள முருக்கபட்டி அங்கன்வாடி மையத்திற்கு சிட்டி அரிமா சங்கம் சார்பில் சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு, சிட்டி அரிமா சங்கத் தலைவர் ஜெ.பிரவின்குமார் தலைமை வகித்தார். நிகழ்வில், அங்கன்வாடி மைய பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. 
மேலும், மாணவர்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 
மாவட்டத் தலைவர் த.பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சந்திரன், செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com