பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
By DIN | Published on : 16th September 2018 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பொன்னமராவதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பொன்னமராவதி புதுவளவு பகுதியைச் சார்ந்தவர் எம்.மணிகண்டன். வெள்ளிக்கிழமை இரவு இவரின் வீட்டின் முன்னே சுமார் 10 நீளமுள்ள மலைப்பாம்பைக் கண்டதும் அதிர்ச்சியுற்றார். தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுப.பாண்டியராஜன் தலைமையில் அங்குவந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.